எனது வாழ்க்கை அவர்கள்… பிரித்தானிய இளம் தம்பதி குறித்து தாயார் உருக்கம்: சாரதியின் ஒப்புதல் வாக்குமூலம்


பிரித்தானியாவில் மெர்சிடிஸ் கார் ஒன்று சுவற்றில் மோதி கோர விபத்தில் சிக்கியதில் இளம் தம்பதி ஒன்று பலியான சம்பவத்தில் சாரதி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சாரதி ஒப்புதல் வாக்குமூலம்

கடந்த 2020 டிசம்பர் மாதம் நடந்த இந்த கோர விபத்தில் 22 வயதான மீஷா அப்சல், மற்றும் அவரது கணவர் 26 வயதான கைல் கான் ஆகியோர் பரிதாபமாக பலியாகினர்.

எனது வாழ்க்கை அவர்கள்... பிரித்தானிய இளம் தம்பதி குறித்து தாயார் உருக்கம்: சாரதியின் ஒப்புதல் வாக்குமூலம் | Couple Killed In Horror Crash Driver Admitting

Credit: BPM

குறித்த தம்பதி சோலிஹல் பகுதியூடாக பயணம் செய்யும் போதே அந்த கோர விபத்து நேர்ந்துள்ளது.
பின் இருக்கையில் அமர்ந்திருந்த இருவரும் சீட் பெல்ட் அணிந்திருந்தாலும், காயங்கள் காரணமாக டிசம்பர் 13 ஞாயிறு அதிகாலையில் இருவரும் மரணமடைந்துள்ளனர்.

உடற்கூராய்வில், தலை மற்றும் கழுத்தில் ஏற்பட்ட காயங்களால் மீஷா இறந்தார் எனவும், தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக கைல் இறந்தார் எனவும் தெரியவந்தது.
இந்த நிலையில், காயங்களுடன் தப்பிய அந்த வாகனத்தின் சாரதி 28 வயதான ஈத்னுன் லியாகத் தம்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதுடன், ஆபத்தான வகையில் வாகனம் செலுத்தவில்லை எனவும் சாதித்துள்ளார்.

ஆனால், பர்மிங்காம் கிரவுன் நீதிமன்றத்தில் இன்று நடந்த விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் இந்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், ஈத்னுன் லியாகத் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

எனது வாழ்க்கை அவர்கள்... பிரித்தானிய இளம் தம்பதி குறித்து தாயார் உருக்கம்: சாரதியின் ஒப்புதல் வாக்குமூலம் | Couple Killed In Horror Crash Driver Admitting

Credit: BPM

எனது வாழ்க்கையை பறித்துவிட்டார்கள்

இந்த நிலையில் தமது மகன் கைல் கான் தொடர்பில் உருக்கமாக பேசிய தாயார் ரோஷ்னி சஜிதா யூசுப், எனது வாழ்க்கையை பறித்துவிட்டார்கள். கைலும் மீஷாவும் எனது வாழ்க்கை. நான் எனது இரு பிள்ளைகளை இளம் வயதில் இழந்துவிட்டேன்.

அவர்கள் விண்ணில் இருந்து புன்னகைத்தபடி, எங்களுக்காக துக்கம் அனுசரிக்க வேண்டாம், நாங்கள் மகிழ்ச்சியாகவே இருக்கிறோம், மரணத்தில் கூட என கூறுவது எனக்கு கேட்கிறது என்றார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.