சென்னை: சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் இருந்து கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரூ.3,49,38,500 வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பது: ’சென்னையில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து போலீஸார் தீவிர வாகனச்சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குடித்துவிட்டு வாகனம் ஓட்டி வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, அபராதம் வித்திக்கப்பட்டு வருகிறது. ஒருசிலர் மட்டுமே அபராதம் செலுத்தும் நிலையில் […]
