விர்ஜீனியா : அமெரிக்காவில், 6 வயது சிறுமி பள்ளிக்கு கைத்துப்பாக்கியை எடுத்துச் சென்றதை அடுத்து, அவரது தாயை போலீசார் கைது செய்தனர்.
அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் நோர்போக் நகரில், தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு பயிலும் 6 வயது சிறுமி, சமீபத்தில் பள்ளிக்கு கைத்துப்பாக்கியுடன் வந்துள்ளார்.
இதனால், அதிர்ச்சி அடைந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். பள்ளிக்கு வந்த போலீசார், சிறுமியிடம் இருந்த கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும், பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சிறுமியின் தாயை கைது செய்த போலீசார், விசாரணைக்குப் பின், அவரை விடுவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement