சட்டவிரோத கிளி வளர்ப்பு : ரோபோ சங்கருக்கு ரூ.2.5 லட்சம் அபராதம்

தமிழில் பல படங்களில் காமெடி நடிகராக நடித்து வருபவர் 'ரோபோ' சங்கர். இவரின் வீட்டில், சட்டவிரோதமாக கிளிகள் வளர்க்கப்பட்டதாக கூறி அவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். அந்த கிளிகள், கிண்டி சிறுவர் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டன. இது குறித்து விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில் சட்டவிரோதமாக கிளிகள் வளர்த்ததாக கூறி ரோபோ சங்கருக்கு ரூ.2.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. வருத்தம் தெரிவித்தால் வழக்கு இல்லை என்றும் வெறும் அபராதம் மட்டுமே விதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுபற்றி ரோபோ சங்கரின் மனைவி பிரியங்காவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது : ‛‛எங்கள் திருமணநாளுக்கு நண்பர்கள் பரிசாக அந்த கிளிகளை தந்தனர். நாங்கள் பச்சைக்கிளி என்றே நினைத்து வளர்த்தோம். பிராணிகள் மீது எங்களுக்கு பிரியம் அதிகம். நாய்க்குட்டி, மீன் வளர்ப்பது போன்று தான் இந்த கிளிகளையும் வளர்த்தோம். சில தினங்களுக்கு முன்பு தான் எங்களுக்கு தெரிந்தது அது விலை உயர்ந்த அலெக்ஸாண்டர் ரக கிளி என்று. நாங்கள் இலங்கைக்கு நிகழ்ச்சி ஒன்றுக்காக 14ம் தேதி சென்றோம். அப்போது எங்கள் வீட்டுக்கு வந்த வனத்துறையினர் உறவினர்களிடம் செய்தியை தெரிவித்து விட்டு கிளிகளை எடுத்து சென்றனர். எங்களுக்கு கொஞ்சம் வருத்தம் இருந்தாலும் சில விசயங்களை தெரிந்து கொண்டோம்'' என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.