நுவபடா :ஒடிசாவின் வனப்பகுதியில் வசிக்கும் மாற்றுத் திறனாளிக்கு, ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா விமானம் வாயிலாக மாதாந்திர
உதவித் தொகை வழங்கும் பஞ்சாயத்து தலைவரின் செயலுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்கு, நுவபடா மாவட்டத்தின் புத்கபாதா கிராமத்தில் ஹெத்தராம் சத்னாமி என்ற மாற்றுத்திறனாளி வசித்து வருகிறார்.இவரது வீடு அடர்ந்த வனப்பகுதியில் இருக்கும்நிலையில், அரசின்மாதாந்திர உதவித் தொகையைப் பெற, ஒவ்வொரு மாதமும் 2 கி.மீ., தொலைவில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்திற்கு செல்ல வேண்டி இருந்தது.
சத்னாமியின் உடல்நிலையை கருத்தில் வைத்து, பஞ்சாயத்து தலைவர் சரோஜ் அகர்வால், தன் சொந்த செலவில் ட்ரோனை வாங்கி, அதன் வாயிலாக உதவித் தொகையை அனுப்பும்
வசதியை ஏற்படுத்திஉள்ளார்.இதையடுத்து, சத்னாமிநேற்று எவ்வித சிரமமும்இன்றி தன் வீட்டின் முன் வந்திறங்கிய ட்ரோன் வாயிலாக உதவித்தொகையைப் பெற்றார்.இது குறித்து, சரோஜ் அகர்வால் கூறுகையில்,”மாற்றுத்திறனாளிசத்னாமியின் வீடு, அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது. இதனால், மிகுந்த சிரமத்திற்கு இடையே நேரில் வந்து உதவித் தொகையை பெற்று வந்தார்.”அவரது சிரமத்தை போக்க, ட்ரோன் வாயிலாகமாதாந்திர உதவித் தொகையை அனுப்ப வழி செய்துள்ளேன்,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement