வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட தேவரியம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய உயர்நிலை பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், கிராமப்புற மாணவிகளுக்கான தற்காப்பு கலையான கராத்தே பயிற்சி துவக்க விழா நேற்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில், ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார் கலந்து கொண்டு தற்காப்பு முதற்கட்ட பயிற்சியை துவக்கி வைத்தார்.
பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை மற்றும் உடற்கல்வியின் அவசியம் குறித்தும், உடற்கல்வி மூலம் அரசு பணிகள் பெறுவது குறித்தும் விளக்கி கூறினார். இந்நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியை எழில் உட்பட ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.