துருக்கி- சிரியா எல்லையில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: வெளிவரும் கலங்கடிக்கும் தகவல்

துருக்கி மற்றும் சிரியா எல்லையில் மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதே பகுதியிலேயே தற்போதும்

ரிக்டர் அளவில் 6.3 என பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கமானது 2 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 46,000 மக்கள் பலியான அதே பகுதியிலேயே தற்போதும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்றே கூறப்படுகிறது.

துருக்கி- சிரியா எல்லையில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: வெளிவரும் கலங்கடிக்கும் தகவல் | Turkey Syria Hit With Another Powerful Earthquake

@AP

நேற்று துருக்கியின் Hatay பிராந்திய மேயர் தெரிவிக்கையில், இப்பகுதியில் மட்டும் 21,000 மக்கள் நிலநடுக்கத்தில் சிக்கி பலியாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த எண்ணிக்கையானது, இதுவரை வெளியானமொத்த பலி எண்ணிக்கையில் கிட்டத்தட்ட சரிபாதி என்றே தெரியவந்துள்ளது.

மேலும், Hatay பகுதியில் சுமார் 24,000 மக்கள் காயங்களுடன் தப்பியதாகவும் மேயர் தெரிவித்துள்ளார்.
அந்தியோக்கியா பகுதியில் சுமார் 80% கட்டிடங்கள் மொத்தமாக சேதமடைந்துள்ளதாகவும், இடித்துவிட்டு புதிதாக கட்டப்பட வேண்டிய நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.  

துருக்கி- சிரியா எல்லையில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: வெளிவரும் கலங்கடிக்கும் தகவல் | Turkey Syria Hit With Another Powerful Earthquake

@getty

Hatay பிராந்தியத்தின் தலைநகரம் தாம் இந்த அந்தியோக்கியா நகரம், வரலாற்றில் பதிவாகியுள்ள மிக பழமையான நகரமாகும் அந்தியோக்கியா.
துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 40,689 என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டாலும், 46,000 கடத்திருக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது.

மேலும், நிலநடுக்கத்தால் உருக்குலைந்த 11 மாகாணங்களில் 9-ல் மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் முடித்துக் கொள்ளப்பட்டதாகவும், வாழத்தகுதியற்ற கட்டிடங்களை இடிக்கும் பணிகள் இனி முன்னெடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கி- சிரியா எல்லையில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: வெளிவரும் கலங்கடிக்கும் தகவல் | Turkey Syria Hit With Another Powerful Earthquake

@reuters

இதனிடையே, உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கமானது எஞ்சியுள்ள மக்களை மீண்டும் பீதியில் தள்ளியுள்ளது.
மோசமாக பாதிக்கப்பட்டிருந்த சுவர் ஒன்று இடிந்து விழுந்ததில் பல பேர் காயங்களுடன் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

துருக்கி- சிரியா எல்லையில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: வெளிவரும் கலங்கடிக்கும் தகவல் | Turkey Syria Hit With Another Powerful Earthquake

@reuters

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.