நாளுக்கு 100 பேர்… கனடாவில் தஞ்சமடையும் உக்ரேனிய மக்கள்


உக்ரேனில் போர் சூழல் நீடித்துவரும் நிலையில், நாளுக்கு 100 பேர் கனடாவின் கல்கரி விமான நிலையத்தில் வந்திறங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கல்கரியில் தங்கும் வசதிகள்

கடந்த 2022 மார்ச் மாதம் தொடங்கி, உக்ரேனிய மக்களுக்கு கல்கரியில் தங்கும் வசதிகள் அளித்துவரும் கிறிஸ்தவ அமைப்பு ஒன்று குறித்த தகவலை வெளிப்படுத்தியுள்ளது.

நாளுக்கு 100 பேர்... கனடாவில் தஞ்சமடையும் உக்ரேனிய மக்கள் | 100 People Per Day Arrive From Ukraine Calgary

@globalnews

உக்ரேனியரான Hanna Vakhovska போர் தொடங்கிய பின்னர், உயிருக்கு பயந்து சுமார் 10 நாட்கள் பதுங்கு குழிகளில் தங்கியதாகவும், உயிருடன் அங்கிருந்து வெளியேற முடியுமா என கலங்கிப் போனதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது தாம் பாதுகாப்பாக உணர்வதாக கல்கரியில் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்தே வசித்துவரும் அவர் தெரிவித்துள்ளார்.
மரியுபோல் பகுதியில் இருந்து வெளியேறி ஆபத்தான பயணம் மேற்கொண்ட அவரும் குடும்பமும், மூன்று ஐரோப்பிய நாடுகளில் தற்காலிகமாக தங்கியுள்ளனர்.

நாளுக்கும் 100 பேர்கள்

தற்போது கல்கரியில் விமான நிலையத்தில் பணியாற்றிவரும் அவர், உக்ரேனிய மக்களுக்காக தம்மால் இயன்ற உதவிகளையும் செய்து வருகிறார்.

நாளுக்கு 100 பேர்... கனடாவில் தஞ்சமடையும் உக்ரேனிய மக்கள் | 100 People Per Day Arrive From Ukraine Calgary

@getty

இந்த நிலையில் தான் கல்கரி கிறிஸ்தவ அமைப்பானது வெளியிட்ட தகவலில், உக்ரேனில் இருந்து நாளுக்கும் 100 பேர்கள் கல்கரியில் விமான இறங்குவதாகவும், உக்ரேனில் போர் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை தங்களுக்கு இல்லை என தெரிவித்துள்ளதாகவும் கூறுகின்றனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.