நிடி ஆயோக் புதிய தலைமை செயல் அதிகாரி நியமனம்| New Chief Executive Officer of Nidi Aayog appointed

புதுடில்லி : ‘நிடி ஆயோக்’ அமைப்பின் புதிய தலைமை செயல் அதிகாரியாக, பி.வி.ஆர். சுப்ரமண்யம் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை தலைமை செயல் அதிகாரியாக இருந்த பரமேஸ்வரன் ஐயர், உலக வங்கியின் செயல் இயக்குனராக அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவரது இடத்துக்கு பி.வி.ஆர். சுப்ரமண்யம் நியமிக்கப்பட்டுள்ளார்.

பரமேஸ்வரன் ஐயர், அமெரிக்காவில் இருக்கும் வாஷிங்டன் டி.சி.,யில் உள்ள உலக வங்கியின் தலைமை அலுவலகத்தில் செயல் இயக்குனராக பொறுப்பேற்க உள்ளார். இவர் மூன்று ஆண்டுகள் இப்பதவியை வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சுப்ரமண்யம், நிடி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்ற நாளிலிருந்து, இரண்டு ஆண்டுகள் இந்த பதவியை வகிப்பார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.