வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஜெய்ப்பூர்: பணவீக்கத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை ஆர்பிஐ (ரிசர்வ் வங்கி) மேற்கொள்ளும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ராஜஸ்தானுக்கு சென்றுள்ளார். பட்ஜெட் தொடர்பாக பல்வேறு துறையினரை சந்தித்து அவர் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து ஜெய்ப்பூரில் செய்தியாளர்களை சந்தித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பதாவது: சத்தீஸ்கரில் காங்கிரஸ் நிர்வாகிகள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை என்பது பழிவாங்கும் நோக்கம் அல்ல. அதேபோல் பழி வாங்கும் உணர்வுடன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பணவீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை ஆர்பிஐ (ரிசர்வ் வங்கி) மேற்கொள்ளும். மேலும், பருப்பு வகைகளை விவசாயம் செய்ய, விவசாயிகளை நாங்கள் ஊக்குவிக்கிறோம். அப்போது தான் வரும் காலத்தில், இந்தியாவில் பருப்பு உற்பத்தி அதிகரிக்கும் எனக் கூறினார்.

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவது மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு குறித்த கேள்விக்கு நிர்மலா சீதாராமன் பதிலளித்து பேசியதாவது: இது அரசாங்கத்தை சார்ந்தது அல்ல. ஜிஎஸ்டி கவுன்சில் மட்டும் இதை முடிவு செய்ய முடியும்.
மாநில அரசு பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர விரும்பினால், கவுன்சில் முடிவு செய்யும். அனைத்து மாநிலங்களின் ஒப்புதலுடன் மட்டுமே ஜிஎஸ்டி வரம்பிற்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வர முடியும் எனக் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement