சா பாவ்லோ,பிரேசிலில் கன மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால், 36 பேர் பலியாகினர். நிலச்சரிவில் இன்னும் ஏராளமானோர் சிக்கியுள்ளதால், உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
தென் அமெரிக்க நாடான பிரேசிலில், கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. சா பாவ்லோ மாகாணத்தில் நேற்று ஒரே நாளில், 60 செ.மீ., மழை கொட்டியது. இதனால், பல நகரங்கள் தண்ணீரில் மிதக்கின்றன. சா செபஸ்டியோ நகரில், மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 50க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்தன.
நுாற்றுக்கணக்கானோர் மாயமாகி உள்ளதால், இவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இந்த கன மழை மற்றும் நிலச்சரிவுக்கு, இதுவரை 7 வயது சிறுமி உட்பட 36 பேர் பலியாகியுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் பலர் காணாமல் போயுள்ளதால், உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement