பிரேசில் நாட்டில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய காட்சிகள் வெளியாகியுள்ளன.
Ilhabela நகரில் பெய்த கனமழையால் வீடுகள் பல இடிந்து விழுந்துள்ளன. மேலும் கடற்கரை பகுதியில் உள்ள சாலைகள் இடிந்து விழுந்தும் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் தலைகீழாக கவிழ்ந்தும் இருக்கும் டிரோன் காட்சிகள் வெளியாகி உள்ளன.
வெள்ளம் காரணமாக நகரின் பல இடங்களில் குடிநீர் மற்றும் போக்குவரத்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். Sao Pauloவில் பெய்த மழைக்கு 7 வயது குழந்தை மற்றும் பெண் ஒருவர் உயிரிழந்து விட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.