புதுடெல்லி: மனிதாபிமானத்தோடு மக்கள் குறைகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தினார். ஒன்றிய பணியாளர் நலன் மற்றும் பென்சன் துறை அதிகாரிகளுக்கான சிந்தனை அமர்வு கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், பிரதமர் மோடி பேசும்போது,‘‘ நாட்டின் வளர்ச்சிக்கு அரசு அதிகாரிகள் குழு மனப்பான்மையுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.
அதிகார படிநிலைகளை கடந்து மனிதாபிமானத்தோடு மக்களின் குறைகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறப்பான முறையில் குறைகளை களைவதே ஜனநாயகத்துக்கு உண்மையான வலு சேர்க்கும். மேலும் குறித்த நேரத்தில் குறைகளை தீர்ப்பதன் மூலமே வலுவான ஜனநாயகம் மற்றும் நாட்டின் நலன் ஆகியவற்றுக்கு ஏற்றதாக இருக்கும்’’ என்றார்.