வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பியாங்யாங் :வட கொரியா ஏவிய, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை, ஜப்பான் கடற்பரப்பில் விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கிழக்காசிய நாடான வட கொரியா, தன்னிடம் உள்ள அணு ஆயுதங்களை வைத்து, தன் அண்டை நாடுகளான தென் கொரியா மற்றும் ஜப்பானை அச்சுறுத்தி வருகிறது. மேலும், அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பல்வேறு ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வருகிறது.
![]() |
இந்நிலையில் வடகொரியா, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சமீபத்தில் ஏவி சோதனை நடத்தியுள்ளது. இதுகுறித்து தென் கொரிய ராணுவ அதிகாரிகள் கூறுகையில், ‘வட கொரியா ஏவிய ஏவுகணை, 900 கி.மீ., தொலைவு வரை பறந்து சென்று ஜப்பான் கடற்பரப்பில் விழுந்தது’ என்றனர். இதை உறுதிப்படுத்தும் வகையில் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா கூறுகையில், ”ஜப்பானின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் உள்ள ஓஷிமா தீவு அருகே வட கொரியா ஏவுகணை விழுந்துள்ளது,” என்றார்.
இதற்கு பதிலடி தரும் வகையில், அமெரிக்காவுடன் இணைந்து தென் கொரியாவும், வட கொரிய எல்லைப்பகுதியில் போர் விமானங்களை பறக்கவிட்டு, பயிற்சி மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement