செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரம் அடுத்த பட்டிபுலம் கிராமத்தில் இந்தியாவின் முதல் ஹைபிரேட் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட் மூலம் இந்தியா முழுவதும் உள்ள 3500 அரசு பள்ளி மாணவர்கள் இணைந்து தயாரித்த 150 சிறிய செயற்கைக்கோளுடன் விண்ணில் ஏவப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக புதுச்சேரி துணை நிலைய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிலையில் நேற்று ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நடந்து வந்த பொழுது கால் தடுமாறி கீழே விழுந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் தாங்கி பிடித்து தூக்கி விட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
இது குறித்தான செய்தி ஊடகத்தில் அப்பொழுது பரபரப்பாக பேசப்பட்டது. இதனை கவனித்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்கள் சந்திப்பின்போது “நான் விழுந்து விழுந்து வேலை செய்தால் தொலைக்காட்சியில் வராது ஆனால் நானே கீழே விழுந்தால் அது பெரிய செய்தியாக தொலைக்காட்சிகளில் வருகிறது. நன்மை செய்ய ஆரம்பித்தால் நாட்டிற்கு ஆளுநர் எதற்கு, ஆட்டிற்கு தாடி எதற்கு என்று பேச ஆரம்பித்து விடுவார்கள் என கடுமையாக சாடியுள்ளார்.