100 ரசிகர்களை சுற்றுலா அழைத்துச் சென்ற விஜய் தேவரகொண்டா

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா கடந்த ஐந்து ஆண்டுகளாக 100 ரசிகர்களை சுற்றுலாவுக்கு அழைத்து செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். கடத்த டிசம்பர் மாதம் 25ம் தேதி ஐந்து பகுதிகளை குறிப்பிட்டு, இதில் இந்த ஆண்டு எந்த பகுதிக்கு சுற்றுலா செல்லலாம் என்று ரசிகர்களிடத்தில் ஒரு கருத்து கேட்டிருந்தார்.

விஜய் தேவரகொண்டா கூறுகையில், அன்பானவர்களே புத்தாண்டு வாழ்த்துக்கள். இதோ தேவரசண்டா அப்டேட் வந்துவிட்டது. உங்களில் 100 பேரை தேர்வு செய்து அனைத்து செலவுகளையும் செய்து விடுமுறைக்கு அனுப்பப் போகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

உணவு, பயணம், தங்குமிடம் மூன்றும் என்னுடைய செலவு என்று கூறி இருந்தேன். நீங்கள் எங்கு செல்ல விரும்புகிறீர்கள் என்பதையும் கேட்டிருந்தேன். அனைவருமே மலைப்பகுதிக்கு செல்ல விரும்புவதாக தெரிவித்திருந்தீர்கள். அதனால் உங்களில் 100 பேரை ஐந்து நாட்களுக்கு மணாலிக்கு அழைத்துச் செல்ல உள்ளேன். பனி மழையை பார்க்கப் போகிறீர்கள். அங்குள்ள கோயில்கள், மரங்கள் ஆகியவற்றை பார்க்க போகிறீர்கள். நாமெல்லாம் இணைந்து நிறைய நிகழ்ச்சிகளை செய்யப் போகிறோம் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில், தான் சொன்னபடியே 100 ரசிகர்களை தற்போது மணாலிக்கு அழைத்து சென்றுள்ளார் விஜய தேவர கொண்டா. அதையடுத்து ரசிகர்களுடன் விமானத்தில் செல்லும் வீடியோ மற்றும் அங்கு ஆடம்பரமான ஓட்டலில் அவர்கள் தங்கி இருக்கும் புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.