80 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட பொக்கிஷம்…தந்தை விட்டுச் சென்ற வரைபடத்தை பயன்படுத்தி அசத்திய மகன்


தந்தை விட்டுச் சென்ற வரைபடத்தை பயன்படுத்தி 80 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட புதையலை கிளாஸெவ்ஸ்கி என்ற நபர் கண்டுபிடித்துள்ளார்.


தப்பியோடிய குடும்பம்

இரண்டாம் உலகப் போரின் போது குடும்பத்தினரால் 80 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட விலைமதிப்பற்ற பொக்கிஷத்தை ஜான் கிளாஸெவ்ஸ்கி என்ற நபர் கண்டுபிடித்து இருப்பதாக கேப்டவுன் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

80 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட பொக்கிஷம்...தந்தை விட்டுச் சென்ற வரைபடத்தை பயன்படுத்தி அசத்திய மகன் | Man Finds Buried Family Silver After 80 YearsJan Glazewski via Pen News

1939ம் ஆண்டு செப்டம்பரின் சோவித் ராணுவம் போலந்திற்குள் முன்னேறி வருவதற்கு முன்பு கிளாஸெவ்ஸ்கி குடும்பம் அவர்களுடைய வெள்ளி பொருட்களை புதைத்து விட்டு கிழக்கு போலந்தில் உள்ள அவர்களது தோட்டத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர் என்று பல்கலைக்கழக இணையம் விவரங்களை வழங்குகிறது.


தந்தை விட்டுச் சென்ற வரைபடம்

போலந்தில் இருந்து தப்பிச் செல்வதற்கு முன்பு கிளாஸெவ்ஸ்கி குடும்பத்தில் இருந்த நான்கு சகோதரர்களும் குடும்பத்தின் வெள்ளி சொத்தை முழங்கால் ஆழமான குழியில் புதைத்துள்ளனர். 

நான்கு மகன்களும் வெளியேறி இருப்பினும் அவர்களின் தந்தை ஆதாம் மட்டும் போலந்தில் தங்கியுள்ளார். மேலும் அவரை மீண்டும் அவரது மகன்கள் யாரும் சந்திக்கவே இல்லை.

80 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட பொக்கிஷம்...தந்தை விட்டுச் சென்ற வரைபடத்தை பயன்படுத்தி அசத்திய மகன் | Man Finds Buried Family Silver After 80 YearsJan Glazewski via Pen News

இந்நிலையில் நான்கு மகன்களில் ஒருவரான குஸ்டாவ்-வின் மகன் ஜான் கிளாஸெவ்ஸ்கி சில அறிவுறுத்தல்களுடன் பல கோரிக்கைகளுக்குப் பிறகு தந்தை குஸ்டாவ் கையால் வரைந்த வரைபடத்தை 1989ல் அவரிடம இருந்தே பெற்றுள்ளார்.

வரைபடத்துடன் குடும்ப வெள்ளியைக் கண்டுபிடிப்பதற்கான தனது தேடலை தொடங்கி அவர் பழைய குடும்ப வீட்டிற்குச் சென்று பார்த்த போது அங்கு பாதாள அறை மட்டுமே எஞ்சி இருப்பதை கண்டு மனமுடைந்தார்.

80 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட பொக்கிஷம்...தந்தை விட்டுச் சென்ற வரைபடத்தை பயன்படுத்தி அசத்திய மகன் | Man Finds Buried Family Silver After 80 YearsJan Glazewski via Pen News

பொக்கிஷம்

ஆனால் முயற்சியை கைவிடாமல் 92 வயதான பள்ளி முதல்வர் மற்றும் உள்ளூர் மக்களின் சிலரின் உதவியுடன் மீண்டும் 2019ல் தேடுதலை கிளாஸெவ்ஸ்கி தீவிரப்படுத்தினார். 

இந்நிலையில் மூன்று நாள் தீவிர தேடுதலுக்கு பிறகு, 80 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட குடும்ப வெள்ளி புதையலை கிளாஸெவ்ஸ்கி கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.

இந்த புதையலில் வெள்ளி மெழுகுவர்த்திகள், குத்துவிளக்குகள், பால் குடங்கள், டிரிங்கெட்டுகள், நாணயங்கள் மற்றும் பதக்கங்கள், செவ்வந்திகள், குவளைகள் மற்றும் ஒரு சில வேட்டைத் துப்பாக்கிகள் பதிக்கப்பட்ட தங்க சிலுவைகள் இருந்தது குறிப்பிடத்தக்கது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.