உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் மனுதாரர் தெரிவித்துள்ளதாவது, “தூத்துக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டோம்.
அதன் பின்னர், கடந்த 2019ல் கருவுற்றதாகவும், கடந்த 2020ல் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அதனால், இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், கருத்தடை அறுவை சிகிச்சையில் அலட்சியமாக செயல்பட்டதாக தூத்துக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
மேலும், தூத்துக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவருக்கு நோட்டீஸ் அனுப்புவதற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.