இன்று திருவாரூர் செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: 2 நாள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்திற்கு இன்று செல்கிறார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு இல்ல திருமண விழா நாளை (22-ம் தேதி) நடைபெறுகிறது. இந்த திருமணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தி வைக்கிறார். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு செல்கிறார். அங்கு அவருக்கு திருச்சி மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.