வேலூர் மாவட்டத்தில வசித்து வருபவர் நரேஷ் குமார் இவர் கடந்த சிவராத்திரி அன்று குடும்பத்தினருடன் வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் சிவராத்திரி முடிந்து காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு வீட்டில் உள்ள தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் ஆகியவை கொள்ளை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பக்கத்தில் வீட்டில் வசிக்கும் 19 வயது இளைஞரான ராஜ்குமார் என்பவரை கைது செய்தனர்.
இதில், ராஜ்குமாரை விசாரித்ததில் தனக்கு அறிமுகமான இன்ஸ்டாகிராம் தோழிக்கு பரிசளிக்க திட்டமிட்டு திருடியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் திருடிய இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.