டேராடூன்: உத்தராகண்டில் இளைஞர்கள் அதிக வேலைவாய்ப்பு பெறும் வகையில் அதிக முதலீடு செய்யப்பட்டு வருகிறது என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
பிரதமர் மோடி உத்தரவின்படி மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 10 லட்சம் இடங்களை ஒன்றரை ஆண்டுக்குள் நிரப்ப முடிவெடுக்கப்பட்டது. அதன்படி வேலை வாய்ப்பு வழங்க வகைசெய்யும் ரோஜ்கார் மேளா என்றதிட்டத்தை கடந்த ஆண்டு அக்டோபரில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், உத்தராகண்டில் ரோஜ்கார் மேளா வேலைவாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சியை பிரதமர் மோடி காணொலி மூலம் நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது:
கடந்த சில மாதங்களில் லட்சக்கணக்கான இளைஞர் களுக்கு மத்திய அரசு, வேலைக் கான நியமன கடிதங்களை வழங்கி உள்ளது. உத்தராகண்டில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் மற்றும் சுய வேலை வாய்ப்புகளுக்கான புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வரு கின்றன. உத்தராகண்டில் அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்க அடிப்படைக் கட்ட மைப்புத் திட்டங்களில் நிறைய முதலீடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனால், மக்கள் தொலைதூர இடங்களுக்கு எளிதில் பயணம் செய்ய முடிவதுடன், எண்ணற்ற அளவிலான வேலை வாய்ப்புகளையும் அவர்களுக்கு உருவாக்கி தரும்.
உத்தராகண்டில் மேற்கொள்ளப் படும் அடிப்படை கட்டமைப்புத் திட்டங்களால் அவர்களுக்கு புதிதாக வேலைவாய்ப்பும், சுயவேலைவாய்ப்பும் மலைப்பகுதி களிலேயே கிடைக்கும். தற்போது அதிக அளவில் சாலைத் திட்டங்களும், ரயில்வே திட்டங்களும்உத்தராகண்டில் செயல்படுத்தப் பட்டு வருவதைப் பார்க்கலாம். இதன்மூலம் அதிக தூரமுள்ள பகுதிகளுக்கு மக்கள் சென்று எளிதில் திரும்ப முடிகிறது.
சுற்றுலா வரைபடங்களில் புதிது புதிதாக சுற்றுலாத் தலங்கள் உருவாகி பிரபலமாகி வருகின்றன. இதன்மூலம் உத்தராகண்ட் இளைஞர்கள் இந்தத் துறையிலும் வேலை பெற்று வருகின்றனர். மேலும் மத்திய அரசின் முத்ரா திட்டம் மூலம் வேலைவாய்ப்பு ஊக்கம் கிடைத்துள்ளது. 38 கோடி முத்ரா திட்டக் கடன்கள் நாடு முழுவதும் வழங்கப்பட்டுள்ளன. இதனால் 8 கோடி இளைஞர்கள் தொழில்முனைவோர்களாக உரு வாகியுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் முதல்வர் புஷ்கர்சிங் தாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.