வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கொச்சி: கோயில் நிர்வாக அமைப்பில் அரசியல் கட்சிகளின் தலையீடு இருக்க கூடாது என கேரள ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பூக்கொட்டு களிக்காவு பகவதி கோயில் மலபார் தேவசம் போர்டு நிர்வாகத்தின் உள்ளது. சமீபத்தில் இக்கோயில் நிர்வாக குழு உறுப்பினர்களாக இடது சாரி கட்சியைச் சேர்ந்த மூன்று பேர் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டனர்.
![]() |
இதனை எதிர்த்து கேரள ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு இன்று நீதிபதி அனில் கே. நரேந்திரன் தலைமையிலான டிவிசன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் கூறியது,கோயில் நிர்வாக அமைப்பை ஏற்கனவே தேவசம் போர்டு என்ற சட்டபூர்வ , சுயாட்சி கொண்ட அமைப்பு நிர்வகித்து வருகிறது. இதில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தலையீடு கூடாது. எனவே நிர்வாக குழு உறுப்பினர்கள் நியமனம் செல்லாது. ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement