ராய்ப்பூர்சத்தீஸ்கரில் திருமணம் செய்ய மறுத்த 16 வயது சிறுமியின் தலைமுடியை பிடித்து, சாலையில் இழுத்துச் சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
சத்தீஸ்கரில், முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, ராய்ப்பூரில் ஓம்கார் திவாரி, 47, என்பவர் மளிகை கடை நடத்தி வந்தார்.
இதில் வேலை செய்த 16 வயது சிறுமியிடம், தன்னை திருமணம் செய்யுமாறு திவாரி வற்புறுத்தியுள்ளார். இதை ஏற்க மறுத்த சிறுமி அவரது கடைக்கு செல்வதை தவிர்த்துள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் சிறுமியின் வீட்டிற்கு குடிபோதையில் சென்ற திவாரி, கத்தியால் சிறுமியின் கழுத்தில் சீவியுள்ளார்.
இதில் சிறுமிக்கு காயம் ஏற்பட்ட நிலையில், அவர் அங்கிருந்து ஓடினார். எனினும், திவாரி சிறுமியை துரத்திச் சென்று அவரின் தலைமுடியை பிடித்து தரதரவென சாலையில் இழுத்து சென்றார். அப்போது, தடுமாறி விழுந்த சிறுமி மயங்கினார்.
சாலையில் சென்றவர்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பான ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து, திவாரியை கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement