கன்னியாகுமரியில் சாலையில் நடந்த சென்ற வட மாநில இளைஞரை, ஓரினச்சேர்க்காக வலுக்கட்டாயமாக இரு சக்கர வாகனத்தில் கடத்த முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.
சைக்கோ நபர் ஒருவர், சாலையில் நடந்து கொண்டிருந்த வடமாநில இளைஞரை ஓரினச்சேர்க்கைக்காக தனது இரு சக்கர வாகனத்தில் கடத்த முயற்சித்த காணொளி, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களில் மிகவும் புகழ்பெற்றது கன்னியாகுமரி. கன்னியாகுமரியில் வட மாநிலத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பல்வேறு கூலித் தொழில்களையும், பானிபூரி உள்ளிட்ட கடைகளையும் நடத்தி வருகின்றனர்.
நான்கு வழிச்சாலை அருகே இரவு நேரத்தில் தனியாக நடந்து செல்லும் வட மாநில இளைஞர்களை குறிவைத்து சைக்கோ இளைஞர் ஒருவர் வலுக்கட்டாயமாக கடத்தி, ஓரினச்சேர்க்கை செய்வதாக புகார் எழுந்து வந்தது.
இந்த நிலையில், கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த பயணி ஒருவர், சாலையில் நடந்து சென்ற வட மாநில இளைஞரை ஓரினச்சேர்க்கைகாக சைக்கோ நபர் இருசக்கர வாகனத்தில் கடத்திச் செல்லும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த காணொளியில், வட மாநில இளைஞர் கதறி கூச்சலிட்டவாரு அழுது கொண்டிருக்கிறார். சைக்கோ நபர் வட மாநில இளைஞரை ஒரு பெண் போல பாவித்து, கடத்தும் முயற்சியில் ஈடுபடுவது பதிவாகியுள்ளது.