பணத்தை வாரி வழங்கும் கட்சிகள்: தேர்தல் அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் – பிரேமலதா கேள்வி

பணத்தையும், பொருளையும் வாரி வழங்கும் கட்சிகள்: தேர்தல் அதிகாரிகளோ, இங்கு வந்துள்ள துணை ராணுவ படையோ ஒருவரை கூட பிடிக்கவில்லை என தேமுதிக பொருளாளர் பிரேமலதா குற்றம் சாட்டினார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேமுதிக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் மாநில பொருளாளர் பிரேமலதா 2-வது நாளாக அக்ரஹாரம், கருங்கல்பாளையம் விநாயகர் கோவில் வீதி, பண்ணாரி அம்மன் கோவில் வீதி உள்ளிட்ட இடங்களில் வாக்காளர்கள் மத்தியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்…
image
ஈரோடு கிழக்கு தொகுதி முதன்முறையாக உதயமாகிய போது அதன் சட்டமன்ற உறுப்பினராக தேமுதிக இருந்தது. இன்று ஆளும் திமுக மக்களை ஆடு, மாடு போல் பட்டியில் அடைத்திருப்பதை தேமுதிக வன்மையாக கண்டிக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக மற்றும் அதிமுகவினர் மாறி மாறி பணத்தையும், பொருளையும் வாரி வழங்கும் நிலையில் அதை தேர்தல் அதிகாரிகளோ, இங்கு வந்துள்ள துணை ராணுவ படையோ ஒருவரை கூட பிடிக்கவில்லை, துணை ராணுவம் எதற்கு இங்கே வந்துள்ளார்கள் என்றே தெரியவில்லை.
பல இடங்களில் மக்களை ஆட்டு மந்தையை அடைப்பது போல் அடைந்து வைத்துள்ளனர். ஒரு இடத்திற்கு கூட துணை ராணுவம் சென்று அடைத்து வைத்துள்ள மக்களை திறந்து விடவில்லை, எதற்காக துணை ராணுவம் இங்கே வரவேண்டும், டாஸ்மாக் கடையை மூடுவோம் என கூறியவர்கள் இன்று அதை பற்றி பேசுவதே இல்லை. பொய் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றும் திமுக, அதிமுகவை மக்கள் புறக்கணித்து, தேமுதிகவிற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்,
image
 இந்நாள் முதல்வரை, முன்னாள் முதல்வர் மீசை வைத்த ஆம்பளையா என பேசுவது தேவையா, மின்கட்டணம் ராக்கெட் வேகத்தில் ஏறிக் கொண்டுள்ளது, தேர்தலின் போது திமுக கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. தமிழ்நாட்டில் பெண்களுக்காக என்றும், எப்போதும் சகோதரியாக துணை நிற்பேன், தமிழக மக்கள் ஒரு மாற்றத்திற்கான வாய்ப்பை தர வேண்டும். திமுக அமைச்சர்கள் சைகோவாக அலைந்து கொண்டுள்ளார்கள், மக்களின் ஏழ்மையும், வறுமையையும் பயன்படுத்தும் திமுகவிற்கு இந்த இடைத்தேர்தலில் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என பேசினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.