மெக்சிகோ சிட்டி,தென் அமெரிக்க நாடுகளான வெனிசுலா, கொலம்பியாவைச் சேர்ந்த பலர், வட அமெரிக்க நாடான மெக்சிகோ வழியாக, ஆபத்தான முறையில் அமெரிக்காவுக்குள் நுழைய பயணம் மேற்கொள்கின்றனர்.
நேற்று, இதுபோல் உரிய ஆவணங்கள் இல்லாமல் வெனிசுலாவைச் சேர்ந்த 45 பேர் பஸ்சில் சென்றனர்.
இது, மெக்சிகோவின் பியூப்பிலா என்ற பகுதியில் சென்றபோது, விபத்துக்கு உள்ளானது. இதில் 15 பேர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், இருவர், மருத்துவமனையில் இறந்தனர். மேலும், ஐந்து பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்து குறித்து மெக்சிகோ போலீசார் மற்றும் குடியேற்ற அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement