
பேண்டஸி படமாக உருவாகும் 'வீரன்'
ஹிப் ஆப் ஆதி நடித்த அன்பறிவு படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் ஆதியை வைத்து அடுத்து தயாரிக்கும் படம் 'வீரன்'. 'மரகத நாணயம்' புகழ் ஏ.ஆர்.கே. சரவன் இயக்குகிறார். படம் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகிறது. ஆதியுடன், அதிரா ராஜ், முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். ஆதியே இசை அமைக்கிறார். தீபக் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகிறது. கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.
தற்போது படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டு இந்த படம் பேண்டசி எலிமென்ட்ஸ் கலந்த படம் என்று அறிவித்துள்ளனர். ஆதி இதற்கு முன்பு நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும், இவருடைய ஸ்டைலும் நடிப்பும் அவருடைய ரசிகர்களுக்கே புதிதான விஷயமாக இதில் இருக்கும். என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.