புதுடில்லி: ஆசிய அபிவிருத்தி வங்கி தலைவர் மசாட்சுகு அசகாவா இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியில் 65-க்கும் மேற்பட்ட நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதன் தலைமையகம் பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலாவில் உள்ளது.
இந்த வங்கியின் தலைவரான ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மசாட்சுகு அசகாவா இன்று பிரதமர் மோடியை அவரது அலுவலக இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது இருவரும் பல்வேறு விஷயங்கள் மற்றும் நாட்டின் வேகமான வளர்ச்சி உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement