புதுடெல்லி: நாட்டின் மிகப்பெரிய பேக்கேஜிங் நிறுவனமான யூப்ளக்ஸ் உடன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினார்கள். டெல்லி, நொய்டா, ஜம்மு காஷ்மீர், குஜராத், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கர்நாடகா உட்பட நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகங்கள், அவற்றுடன் தொடர்புடைய சுமார் 70 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இது தொடர்பாக நிறுவனம் எந்த விளக்கமும் தரவில்லை.
