வங்கி நிதி மோசடியில் 5 பேருக்கு 7 ஆண்டு சிறை

புதுடெல்லி: சிக்கிலாம் டிரேட் ஹவுஸ் நிறுவனம் போலியான ஆவணங்களை காண்பித்து, எஸ்பிஐ வங்கியில்ரூ.2 கோடியே 8 லட்சத்து 50 ஆயிரம் கடன் பெற்றதாக சிபிஐ வழக்கு பதிந்து விசாரித்து வந்தது.  கடந்த 2013ம் ஆண்டு அமலாக்கத்துறை வழக்கு பதிந்தது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், சிக்கிலாம் நிறுவனத்தின் 2 ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் 3 பேர் என மொத்தம் 5 பேருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும்ரூ.50,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.