விழுப்புரம் அருகே தன்னுடைய அண்ணன் மகளுக்கு காதல் தொல்லை கொடுத்த கல்லூரி மாணவனை வெட்டி படுகொலை செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் அடுத்த கப்பூரைச் சேர்ந்தவர் முனியன். இவரின் மகன் ராஜன் என்கின்ற ராமன் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பி ஏ மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில், இன்று கானை பகுதி அருகே தலையில் வெட்டு காயங்களுடன் ராமன் இறந்து கிடந்தார். ராமனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் இந்த கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், அதே பகுதியை சேர்ந்த சத்யராஜ், கார்த்திக் இருவரும் ராமனை கொலை செய்தது உறுதியானது.
இதனை அடுத்து அவர்களை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில், சத்யராஜின் அண்ணன் மகளை ராமன் காதலிப்பதாக தொல்லை கொடுத்து வந்ததாகவும், இதனால் தனது நண்பருடன் சேர்ந்து ராமனை கொலை செய்ததாகவும் தெரியவந்துள்ளது.
இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.