7,000 புதிய தீவுகளைக் கண்டுபிடித்த ஜப்பான்| இஸ்ரேலில் வெடிக்கும் மக்கள் போராட்டம் – உலகச் செய்திகள்

2006 -2017 ஆண்டுகளில் ரகசியமாக வட கொரியா நடத்திய ஏவுகணை சோதனைகளால், தென் கொரியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சியோலில் உள்ள மனித உரிமைகள் அமைப்பு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

ஜெர்மனியின் டஸ்சல்டாரஃபை (Düsseldorf) சேர்ந்த நபருக்கு இருந்த ஹேச்.ஐ.வி, புற்றுநோய் பாதிப்பு, குருத்தணு மாற்றுச் சிகிச்சையின் மூலம் தற்போது முழுமையாகக் குணப்படுத்தப்பட்டிருக்கிறது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 47,000 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நேற்று மீண்டும் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 3 பேர் உயிரிழந்தனர், 200 பேர் காயமடைந்தனர்.

1987-க்கு பிறகு கடல் பகுதிகளில் தற்போது ஜப்பான் நடத்திய ஆய்வில் புதிதாக 7,000 தீவுகளைக் கண்டுபிடித்திருக்கிறது. இதுவரை 6,852 ஆக இருந்த ஜப்பானின் தீவுகளின் எண்ணிக்கை தற்போது 14, 125 ஆக உயர்ந்திருக்கிறது.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர்களான ஜார்ஜ் வாஷிங்டன் (George Washington), ஜான் எஃப் கென்னடி (John F. Kennedy), ரொனால்ட் ரீகன் (Ronald Reagan), உள்ளிட்டோரின் தலைமுடியின் மாதிரிகள் விண்வெளிக்கு அனுப்பப்படவிருக்கிறது. இந்தத் தகவலை செலெஸ்டிஸ் என்ற நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

மொரிசியஸில் ஃப்ரெட்டி ( Freddy) புயலால் கனமழை பெய்து வருகிறது. இதனால் அரசு அலுவலகங்கள், கடைகள், போக்குவரத்து, வங்கிகள் என எல்லா சேவைகளும் நிறுத்தப்பட்டிருக்கிறது.

இஸ்ரேலில் நீதித்துறை சீர்திருத்த மசோதாவை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர். ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக இந்த மசோதா இருப்பதாக மக்கள் குற்றம்சாட்டினர்.

இஸ்ரேலில் நடத்தப்பட்ட எண்ணெய்க் கப்பல் தாக்குதலுக்கு இரான் தான் காரணம் என்ற இஸ்ரேலின் குற்றச்சாட்டை இரான் முழுவதுமாக மறுத்திருக்கிறது.

துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் காரணமாக ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் இடையேயான தொர்காம் எல்லை மூடப்பட்டிருக்கிறது.

இங்கிலாந்து அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகராக Dame Angela McLean (டேம் ஏஞ்சலா மெக்லீன்) நியமிக்கப்பட்டிருக்கிறார். அறிவியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கும் முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.