ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு திமுகவினர் பிரஷர் குக்கரும், அதிமுகவினர் கொலுசையும் வினியோகம் செய்துவருவதாக புகார் எழுந்துள்ளது.
ஈரோடு கிழக்கு செங்கோடம்பாளையம் சக்தி நகர் டென்னிஸ் கோர்ட் எதிரில் உள்ள வீதியில் குமாரசாமி வீட்டில் இருந்து தி மு க வினர் குக்கர் வினியோகம். @TNelectionsCEO @ECISVEEP pic.twitter.com/f6A2FDVOde
— Savukku Shankar (@Veera284) February 20, 2023
மேலும், டாஸ்மாக் பணம் மூலம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்படுவதாக தேர்தல் ஆணையரிடம் அதிமுக புகார் அளித்துள்ளது.
இதற்கிடையே, ஈரோடு இடைத்தேர்தல் இதுவரை 61 லட்சத்தி 70 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்து இருந்தார்.
மேலும், தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு வந்தாலும், இடைத்தலை நிறுத்த வேண்டும் என்று எவ்வித புகாரும் இதுவரை வரவில்லை என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை கோரி, கோவை மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவரின் அந்த மனுவில், “தேர்தல் முறைகேடு தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க கோரி அளிக்கப்பட்ட மனு மீதான தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று அந்த மனுவில் அவர் தெறிவித்துள்ளார்.