வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: அ.தி.மு.க., பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை (23 ம் தேதி) தீர்ப்பு வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2022 ஜூலை 11ல் நடந்த அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் இடைக்கால பொதுச் செயலராக, முன்னாள் முதல்வர் பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். மற்றொரு முன்னாள் முதல்வரான பன்னீர்செல்வம், ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் இதில் அறிவிக்கப்பட்டது.
![]() |
இதை எதிர்த்து, பன்னீர்செல்வம் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி முன், மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி, ‘பொதுக்குழு செல்லாது’ என, உத்தரவிட்டார்.இதை எதிர்த்து, பழனிசாமி தரப்பில் உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில், ‘பொதுக்குழு செல்லும்’ என, தீர்ப்பளிக்கப்பட்டது.
இதை எதிர்த்து, பன்னீர்செல்வம் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை யாருக்கு என்பது தொடர்பாக வழக்கில் , இரட்டை இலை இ.பி.எஸ்., தரப்பிற்கு சாதகமான தீர்ப்பு வெளியானது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், அ.தி.மு.க.,பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் அனைத்து விசாரணைகளும் முடிந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த வழக்கில் நாளை (பிப்.23) தீர்ப்பு வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement