ஆர்சிபி அல்ல…இந்தியா என்று சொல்லுங்கள்…ரசிகர்களின் இதயங்களை வென்ற கோலி…! – வைரலாகும் வீடியோ

புது டெல்லி,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நாக்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2-வது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்று, 4 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் டெல்லி டெஸ்டின் போது இந்திய அணி பந்து வீசிக் கொண்டிருந்த நேரத்தில், விராட் கோலியை பார்த்து ரசிகர்கள் ஆர்சிபி ஆர்சிபி என்று குரல் எழுப்பினர்.

அவர்களை நோக்கி அதட்டிய விராட் கோலி தனது இந்திய அணியின் ஜெர்சியை சுட்டிக்காட்டினார். அதன்பின்னர் ரசிகர்கள், ‘இந்தியா இந்தியா’ என்று குரல் எழுப்பினர்.

இதுதொடர்பான சிறிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விராட் கோலியின் செயலை பல்வேறு நபர்களும் பாராட்டி வீடியோவை பகிர்ந்துள்ளனர். முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், அடுத்த போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் மார்ச் 1-ம் தேதி தொடங்குகிறது.


Related Tags :

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.