புதுடில்லி :இந்தியர்கள், வெளிநாட்டு பயணங்களுக்காக, ஒவ்வொரு மாதமும் 8,300 கோடி ரூபாயை செலவிடுகின்றனர். இது கொரோனாவிற்கு முந்தைய அளவைக் காட்டிலும் அதிகம், என ரிசர்வ் வங்கி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
இது குறித்து, அதில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
கடந்த நிதியாண்டில், வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட இந்தியர்கள், 82 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டுப் பணங்களை பெற்றுள்ளனர்.
இதுவே, கடந்த 2021 – 22 நிதியாண்டில் வெளிநாடுகளுக்கான பயணச் செலவு 34 ஆயிரத்து, 500 கோடி ரூபாயாகவும்; கொரோனாவிற்கு முந்தைய 2019 – 20ம் நிதியாண்டில் 44 ஆயிரத்து, 800 கோடி ரூபாயாகவும் இருந்தது. 2021_22ம் ஆண்டில், கொரோனா கட்டுப்பாடு
களால் செலவு மிகவும் குறைந்துபோனது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.இந்தியர்களை பொறுத்தவரை, வியட்னாம், தாய்லாந்து, ஐரோப்பா, இந்தோனேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகள் மிகவும் விரும்பிச் செல்லும் நாடுகளாக உள்ளன. 75 சதவீத மக்கள், தற்போது சர்வதேச சுற்றுலாவை தேர்ந்தெடுக்கத் துவங்கியுள்ளனர்.
மாதாந்திர தவணை அடிப்படையில், சுற்றுலாவுக்கான கட்டண திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதால், மக்கள் வெளிநாடுகளில் தங்களின் விடுமுறையை செலவிட விரும்புவதாக சுற்றுலா துறையினர் தெரிவிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement