இரண்டு பெண்மணிகளுக்கு ஷூ பாலிஷ் போட்ட மீசை: எடப்பாடியை தாக்கி பேசிய உதயநிதி

ஆளுநருக்கு காவடி தூக்கவே எடப்பாடி பழனிசாமிக்கு நேரம் சரியாக இருப்பதாக
உதயநிதி ஸ்டாலின்
கூறினார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்னிட்டு உதயநிதி ஸ்டாலின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.

நேற்றைய பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து பேசினார். “ஈரோட்டுக்கு பலமுறை வந்துள்ளேன். நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி வெற்றியை கொடுத்த மக்கள் நீங்கள். அமைச்சர் பதவி ஏற்ற பின்பு முதல் முறையாக ஈரோட்டிற்கு வந்துள்ளேன். முன்பு எனக்கு வெற்றியை தேடித் தந்தது போல இந்த முறை கை சின்னத்திற்கு போட்டியிடும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை பொதுமக்கள் ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

ஒரு லட்சம் வாக்கு வித்தியாசம்!

கடந்த முறை திருமகன் ஈவேரா 9000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மகன் விட்டுச் சென்ற பணியை தந்தை ஆற்றிட அவரை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடையச் செய்ய வேண்டும். அப்படி வெற்றியடைய செய்து விட்டால் மாதம்தோறும் ஈரோட்டிற்கு வந்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து அதை நான் பூர்த்தி செய்திடுவேன். தாய்மார்கள் நினைத்தால் எதையும் மாற்றலாம்.

ஷூ பாலிஷ் போட்ட மீசை!

ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை துரத்தி துரத்தி அடிக்கின்றனர். கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மீசையை பற்றி பேசினார். கடந்த 2017இல் தலைமைச் செயலகத்தில் சோதனை செய்தபோது அந்த மீசை என்ன செய்தது, தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக்கொன்ற பொழுது அந்த மீசை என்ன செய்து கொண்டிருந்தது, வடநாட்டில் கொலை செய்தபோது அந்த மீசை என்ன செய்து கொண்டிருந்தது? அந்த மீசை என்ன செய்து கொண்டிருந்தது என்று எங்களுக்குத் தெரியும். இரண்டு பெண்மணிகளுக்கும் ஷூ பாலிஷ் போட்டுக் கொண்டிருந்தது. நான் பேச ஆரம்பித்தால் தாங்க மாட்டீர்கள்.

வாக்குறுதிகளை நிறைவேற்றிய திமுக அரசு!

அதிமுக ஆட்சியில் 5 லட்சம் கோடி கடன் விட்டு வைத்து சென்று விட்டனர். பெண்களுக்கு இன்னும் ஐந்து, ஆறு மாதங்களில் உரிமைத்தொகை வந்து சேரும். தேர்தல் வாக்குறுதியில் ஆவின் பால் லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் குறைத்தோம். கொரோனா காலத்தில் உதவித்தொகை வழங்கினோம். இலவசமாக பெண்கள் பஸ்ஸில் பயணிக்க அனுமதித்தோம். மின் இணைப்பு வழங்கியுள்ளோம். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஓபிஎஸ் கவர்னர், எடப்பாடி பாஜக தலைவர்!

எடப்பாடி யாருக்கும் உண்மையாக இருந்தது இல்லை. ஆளுநருக்கு காவடி தூக்கவே நேரம் சரியாக உள்ளது. 19 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. இதுவரை தமிழக மக்களுக்காக ஆளுநரை சந்தித்து மசோதாக்கள் ஏன் நிலுவையில் உள்ளது என எடப்பாடி அவரால் கேள்வி கேட்க முடியவில்லை. அதிமுகவினர் பாஜகவிற்கு அடிமையாக மாறிவிட்டனர். இன்னும் சில நாட்களில் ஓ பன்னீர்செல்வம் கவர்னராக மாறிவிடுவார். எடப்பாடி பாஜகவுக்கு தலைவராக மாறிவிடுவார். அந்த நிலைதான் தமிழகத்தில் உள்ளது.

பிபிசி ஐடி சர்வே!

பிரதமர் மோடி அவர்கள் வெளியில் செல்ல வேண்டும் என்றால் அதானி ஏர்போர்ட்டில் தான் செல்கிறார். பொதுத்துறைக்கு சொந்தமான ஆறு ஏர்போர்ட்டுகளை அதானி நிறுவனத்திற்கு விட்டுவிட்டார். பி பி சி ஆவண படுகொலை விவாகரத்தில் அலுவலகத்தில் ரெய்டு நடத்துவதும் வாடிக்கையாக பாஜகவிற்கு மாறிவிட்டது.

இரண்டு ஆண்டுகளில் பல சாதனைகள்!

சென்னையில் கிங்ஸ் மருத்துவமனை மற்றும் மதுரையில் கலைஞர் நூலகம் விரைவில் திறக்கப்படும். ஆட்சியேற்ற இரண்டு ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளோம். பொதுமக்கள் மறக்காமல் கை சின்னத்திற்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் இ.வி.கே.எஸ் இளங்கோவனை வெற்றியடைய செய்ய வேண்டும்” என்று அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.