தட்சிண கன்னடா,: ரெஞ்சிலாடி கிராமத்தில், இருவரை கொன்ற காட்டு யானையை பிடிக்க, ஐந்து கும்கிகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
தட்சிண கன்னடா மாவட்டம், கடபா தாலுகா, ரெஞ்சிலாடி கிராமத்தில் நேற்று முன்தினம், காட்டு யானை தாக்கியதில் ரஞ்சிதா, 21, அவரை காப்பாற்ற முயன்ற ரமேஷ் ராய், 55, ஆகியோர் உயிரிழந்தனர். இருவரின் உடல்களையும் எடுக்க விடாமல், கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
வனத்துறையினருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு, தலா 15 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று, கலெக்டர் ரவிகுமார் அறிவித்தார்.
இந்நிலையில் இருவரை கொன்ற, காட்டு யானையை பிடிக்க, ‘ஆப்பரேஷன் எலிபேன்ட்’ என்ற பெயரில், நேற்று தேடுதல் வேட்டை துவங்கியது. யானையை தேடுவதற்காக நாகரஹொளே, துபாரே முகாமில் இருந்து, ஐந்து ‘கும்கி’ யானைகள் நேற்று காலை அழைத்து வரப்பட்டன.
இதன் உதவியுடன், 50-க்கும் மேற்பட்ட வனத்துறையினர், காட்டு யானையை தேடுகின்றனர். ‘ட்ரோன்’ மூலமும் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement