சண்டிகர், ஹரியானாவில் இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் மூவர், போலீசாருக்கு தகவல் கொடுக்கும் ‘இன்பார்மர்’கள் என, தெரியவந்துள்ளது.
ஹரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தில் ஒரு சொகுசு காரில், தீயில் எரிந்த நிலையில் இரண்டு இளைஞர்களின் உடல்கள் சமீபத்தில் மீட்கப்பட்டன.
விசாரணையில், அவர்களது பெயர்கள் ஜுனைத், நாசிர் என்பதும், இருவரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
பசு கடத்தல்காரர்கள் என நினைத்து, ஒரு கும்பல் இவர்களை அடித்துக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக அனில், ஸ்ரீகாந்த், ரினு சைனி, லோகேஷ் சின்கலா, மோகித் யாதவ் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த ஐந்து பேரில், அனில், ரிங்கு சைனி, லோகேஷ் ஆகியோர் ஹரியானா போலீசாருக்கு தகவல் கொடுக்கும், ‘இன்பார்மர்’களாக செயல்பட்டு வந்தது தற்போது தெரியவந்துள்ளது.
பசு கடத்தல், பசு வதை தொடர்பாக ஹரியானா போலீசாருக்கு இவர்கள் அவ்வப்போது தகவல் கொடுத்து வந்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement