ஓசூர்: ஓசூர் அருகே எருதாட்டத்தில் காளை முட்டி வாலிபர் பலியானார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஆவலப்பள்ளி சப்பளம்மா கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று பாரம்பரிய எருதாட்ட விழா நடந்தது. பார்வையாளராக வேடிக்கை பார்த்த, ஆரோப்பள்ளி கிராமத்தை சேர்ந்த மஞ்சு (30) என்ற வாலிபரை காளை முட்டியது. இதில் படுகாயமடைந்த அவர் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். மேலும் காளைகள் முட்டியதில், 6 வீரர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
