கர்நாடகாவில் 1952முதல் கர்நாடகாவில் பொதுத்தேர்தல் நடந்து வருகிறது. இதுவரை நான்கு முதல்வர்கள் மட்டுமே முழுமையாக ஐந்து ஆண்டு ஆட்சியை பூர்த்தி செய்துள்ளனர்.
இந்தியாவே, கர்நாடக சட்ட சபை தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறது.
கர்நாடகாவை பொறுத்த வரை 1952 முதல் இதுவரை ௨௩ பேர் முதல்வர்களாக பதவி வகித்துள்ளனர். ஆனால் வெறும் நான்கு முதல்வர்கள் மட்டுமே ஐந்து ஆண்டு ஆட்சியை முழுமையாக நிறைவு செய்துள்ளனர்.
இதன்படி 1962 — 67 ஆண்டு வரை நிஜலிங்கப்பா முதல் முறையாக ஐந்து ஆண்டுகளை பூர்த்தி செய்தார்.1972 முதல் 78 வரை தேவராஜ் அர்ஸும், 1999- 2004 ஆண்டு வரை எஸ்.எம்.கிருஷ்ணாவும், 2013 முதல் 2018 ஆண்டு வரை சித்தராமையாவும் தங்களது ஐந்து ஆண்டு ஆட்சியை பூர்த்தி செய்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் காங்கிரசை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் பின் 2018ல் நடந்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ் – ம.ஜ.த., கூட்டணி ஆட்சி ஒரு ஆண்டு மட்டுமே நீடித்தது.
அதன்பின், பா.ஜ., நான்கு ஆண்டு ஆட்சி செய்தாலும், இரண்டு முதல்வர்கள் பதவி வகித்தனர்.
இந்த முறை நடக்கும் தேர்தலில் ஏதாவது ஒரு கட்சிக்கு பெரும்பான்மை கிடைத்து, ஐந்து ஆண்டு ஒரே முதல்வர் பதவி வகிப்பாரா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.
நமது நிருபர் –
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement