
ஒரு நாள் கதையில் வெற்றி
சிகை, பக்ரீத் படங்களை இயக்கிய ஜெகதீசன் சுபு இயக்கி உள்ள புதிய படம் 'இரவு'. இதனை பக்ரீத் படத்தை தயாரித்த எம்.எஸ் முருகராஜ் தயாரித்துள்ளார். அரியா செல்வராஜ் என்ற புதுமுகம் நாயகியாக அறிமுகமாகிறார். இவர்கள் தவிர மன்சூரலிகான், சுனிதா கொகய், சாந்தனா பரத், தீபா சங்கர், பொன்னம்பலம், ஜார்ஜ் மரியான் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஸ்ரீனிவாசன் தயாநிதி ஒளிப்பதிவு செய்கிறார். எல்.வி.முத்து கணேஷ் இசை அமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் ஜெகதீசன் சுபு கூறியதாவது : சிகை படத்தில் திருநங்கையின் காதலை சொன்னேன், பக்ரீத்தில் ஒட்டகத்திற்கும், மனிதனுக்குமான அன்பை சொன்னேன். இந்த படம் அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சைக்காலஜிக்கல் த்ரில்லர் படம். ஒரு நாளில் நடக்கிற மாதிரியான கதை. தன் முன்னால் நடப்பது நிஜமா, கற்பனையான என்று தெரியாத ஒரு இளைஞன் அந்த பிரச்சினையில் இருந்து எப்படி வெளியில் வருகிறான் என்பதுதான் படத்தின் கதை. என்றார்.