கல்லூரி விரிவுரையாளர்களுக்கு குறைந்த ஊதியத்தை கொடுத்து அவமதிக்கின்றோம் : கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு..!!

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் உள்ள பாரதிய ஜனசங்கத்தின் தலைவர் தீனதயாள் உபாத்யாயா பெயரில் அமைந்துள்ள ஆராய்ச்சி இருக்கை சார்பில் பேராசியர் தர்மலிங்கம் தமிழில் மொழிபெயர்த்த தீனதயாள் உபாத்யாயா எழுதிய dispersion of thought and integral humanism எனும் புத்தகங்களின் தமிழாக்க நூல்கள், சிந்தனை சிதறல்கள் மற்றும் ஒருங்கிணைந்த மனிதநேயம் ஆகிய புத்தகங்களை தமிழ்நாடு கவர்னர் ஆர்ன.என்.ரவி கவர்னர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டார்.

பின்னர் பேசிய அவர்; 75 ஆண்டுகளுக்கு பிறகும் பலர் இந்தியாவில் ஏழைகளாக உள்ளதற்கு மேற்கத்திய கோட்பாடுகளை பின்பற்றியதே காரணம். பரினாம வளர்ச்சிக்கு சார்லஸ் டார்வினையும், ஜனநாயகத்திற்கு ஆப்ரஹாம் லிங்கனை உதாரணமாக காட்டுவது மேற்கத்திய அடிப்படை மனநிலை. இந்தியாவை சிதைத்த காரல் மார்க்ஸின் சிந்தனை தற்போது புறந்தள்ளப்பட்டுள்ளது உதாரணமாக காட்டுவதும், சார்லஸ் டார்வினின் ஆப்ரகாம் லிங்கனை ஜனநாயகத்திற்கு பரிணாம வளர்ச்சி குறித்த கோட்பாட்டை பின்பற்றுவதும் மேற்கத்திய அடிமை மனநிலையை காட்டுகிறது.

பல பிரச்னைகளை தீர்க்கத் தெரியாமல் உலக நாடுகள் உள்ளன; ஆனால், இந்தியாவிடம் தீர்வு உள்ளது; 25 ஆண்டுகளில் உலகின் பெரும் வளர்ந்த நாடாக இந்தியா இருக்கும். தமிழ்நாட்டில் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் நிரம்ப படித்துள்ளனர். அவர்களுக்கு ஊதியமாக ரூ10,000 வழங்கி அவமதிக்கின்றோம் என்றும் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.