நித்தியானந்தாவால் உருவாக்கப்பட்ட கைலாசா நாட்டில் வேலைவாய்ப்பிற்கான ஒரு விளம்பரம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நித்தியானந்தா இந்தியாவிலிருந்து வெளியேறி கைலாசா என்ற நாட்டை உருவாக்கி அங்கு வாழ்ந்து வருகிறார். அந்த நாடு எங்கே இருக்கிறது என்று இதுவரை யாருக்கும் தெரியவில்லை.
இந்நிலையில் கைலாச நாட்டில் வேலை இருப்பதாக கூறி ஒரு விளம்பரம் ஒன்று சென்னை உள்ளிட்ட நகரங்களில் விளம்பரப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நித்தியானந்தாவின் பெங்களூர் விடுதியை தொடர்பு கொண்டு பேசியபோது அங்கே பிளம்பர் முதல் ஐடி வரை தகுதிக்கேற்ப பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் வேலைவாய்ப்பில் சேருவோருக்கு உணவு மற்றும் உறைவிடம் மருத்துவ வசதிகள் ஆகியவை அனைத்தும் இலவசமாக வழங்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்மீக பயிற்சி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் காவல்துறையினர் இது தொடர்பாக தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விடுதியில் நன்றாக பணி செய்யும் நபர்கள் கைலாசாவிற்கு அனுப்பப்படுவார்கள் எனவும் விடுதியிலிருந்து பேசிய நபர் தெரிவித்திருக்கிறார். நித்தியானந்தாவின் கைலாசா நாட்டின் வேலைவாய்ப்பு தமிழகத்திலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.