
சூப்பர் சிங்கர் மானசியின் க்யூட் க்ளிக்ஸ்
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான மானசி, 1 நிமிட ஆல்பத்திற்கு பாட்டு பாடி நடனமாடியிருந்தார். அந்த ஆல்பம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பலரும் அதை பார்த்துவிட்டு மானசியை ஹீரோயின் என புகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், ஆப்பிரிக்காவுக்கு சுற்றுலா சென்றுள்ள மானசி அங்குள்ள தீவு கடற்கரையில் நின்று க்யூட்டாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். டிரெண்டாகி வரும் அந்த புகைப்படங்களுக்கு ஹார்டின்கள் மழையென பொழிந்து வருகிறது. தமிழ் சினிமாவுக்கு அழகான புதுமுக ஹீரோயின் ரெடி!