செக்ஸ் அடிமை…! கொலை…! வலை விரிக்கும் ஆபத்தான ஆன்லைன் டேட்டிங் செயலிகள் – உண்மைக் கதைகள்

புதுடெல்லி

இந்த நவீன உலகில் அனைத்துமே ஆன்லைன் என்றாகிவிட்டது. உட்கார்ந்த இடத்தில் இருந்தே அனைத்தையும் பெற முடிகிறது. டேட்டிங் தொடங்கி இப்போது ஷாப்பிங் வரை அனைத்துமே ஆன்லைனில் தான் நடக்கிறது.

ஆன்லைன் செயலிகளின் வருகைக்குப் பின் காதலிக்கும் முறையே முற்றிலுமாக மாறிவிட்டது. சென்னை, கோவை உள்ளிட்ட பல நகரங்களிலும் டேட்டிங் செயலிகளைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. சில நொடிகளில் நமக்குப் பிடித்த நபரை வலதுபுறம் ஸ்வைப் செய்தால் போதும்.. அவர்களும் அதேபோல செய்தால் டேட்டிங் ஓகே ஆகிவிடும்.இதனால் டேட்டிங் செயலிகள் இந்தியாவில் பிரபலமாக உள்ளன.

நிஜ வாழ்க்கையில் அன்பு கிடைக்காத சிலர் ஆன்லைனில் அன்பைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள் அது தான் ஆன் லைன் டேட்டிங் . ஆன்லைன் டேட்டிங்கில் எதுவும் எளிதானது அல்ல.

இருப்பினும், இதுபோன்ற ஆன்லைன் செயலிகள் மூலம் அறிமுகமாகும் நபர்களைச் சந்திக்கச் செல்லும் முன்பு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பலரும் எச்சரிக்கின்றனர்.

சில குழப்பமானவை மற்றும் உங்களை பயமுறுத்தும் அளவுக்கு ஆபாத்தானவை. போதைப்பொருள் முதல் கொலை வரை, ஆன்லைன் டேட்டிங்கில் குற்றங்கள் நடக்கின்றன. நாம் பாதிக்கபட்ட சிலருடைய கதைகளை படித்து கொண்டு இருக்கும் போதே பலர் டேட்டிங் செயலில் தனக்கு ஜோடியை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வரத்தான் செய்கின்றனர்.

டேட்டிங் செயலியில் ஏமாந்த சிலருடைய உண்மைக் கதைகளை நீங்கள் படியுங்கள்

ஆன்லைன் மூலம் டேட்டிங் சென்ற ஒருவருக்கு நேர்ந்த கொடூரம் பலருக்கும் அதிர்ச்சி அளிப்பதாகவே உள்ளது. ஐஐடி மும்பையில் முனைவர் படிப்பைப் படிக்கும் மாணவர் ஒருவர் தான் இந்த புகாரை அளித்துள்ளார்.

33 வயதான அந்த ஐஐடி மாணவருக்கு கிரிண்டர் செயலி மூலம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கிரிண்டர் செயலி என்பது தன்பாலின ஈர்ப்பாளர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் ஒரு டேட்டிங் செயலியாகும். குற்றஞ்சாட்டப்பட்ட அந்த நபருக்கு மனைவியும் இருந்துள்ளார். இருப்பினும், இந்த இளைஞருடன் கிரிண்டர் செயலியில் நன்கு பேசிய அந்த நபர் ஒரு நாள் வீட்டிற்கு வரச் சொல்லியுள்ளார். நன்கு பேசுகிறார். மேலும் வீட்டிற்கு தானே வரச் சொல்கிறார் என்று நம்பி இவரும் அங்குச் சென்றுள்ளார்.

ஆனால், அங்கு நடந்த சம்பவம் தான் இவருக்குப் பேரதிர்ச்சியாக அமைந்துவிட்டது.. அதாவது அங்குச் சென்றவுடன் அந்த தம்பதி, இயற்கைக்கு மாறான முறையில் உடலுறவு கொண்டுள்ளனர். மேலும், அவரை ஒரு பாலியல் அடிமையாக மாற்றி, மிரட்டிப் பயன்படுத்தியுள்ளனர். மேலும், கொலை செய்யும் வகையில் கழுத்தையும் நெறித்தும் டார்ச்சர் செய்துள்ளனர். இன்னும் சில நொடிகள் கழுத்தை நெறித்திருந்தால். அவர் உயிரிழந்திருக்கவே கூடும் என்று என்கிறார்.

குற்றஞ்சாட்டப்பட்ட அந்த தம்பதி நல்ல நிறுவனத்தில் நல்ல வேலையில் பணிபுரிந்து வருகின்றனர். இது தொடர்பாக அந்த நபர் மும்பை போலீசாரிடம் புகாரும் அளித்துள்ளார். அந்த ஜோடி இயற்கைக்கு மாறான முறையில் தன்னுடன் உறவு கொண்டதாகவும் கைகள் மற்றும் கழுத்தைக் கட்டி வைத்து. உடலின் பல பாகங்களை எரித்ததாகவும் அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் அந்த தம்பதி மீது கொலை முயற்சி, இயற்கைக்கு மாறான உறவு, பிளாக் மேஜிக் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அந்த நபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

மீனு ஜெயின் இவர் ஓய்வு பெற்ற விமானப்படை பிரிவு தளபதியின் மனைவி. டேட்டிங் செயலியில் தினேஷ் தீட்சித்தை என்பவருடன் பழக்கமாகை அவரை காதலிக்கிறார். பின்னர் வாட்ஸ்அப்பில் ஆறு மாதங்களாக காதலித்து வந்தனர். இறுதியாக அவர்கள் சந்திக்கும் போது, தீட்சித் அவரை ஏமாற்றி மீனுவிடமிருந்து நகைகளை பறித்து கொள்கிறார்.

அதுமட்டுமின்றி, அதன்பிறகு மீனு கொடூரமாக கொல்லப்பட்டார்.போலீசார் விசாரணையில் டேட்டிங் செயலி காதல் விவகாரம் தெரியவந்தது. விசாரணையில் தீட்சித் ஒரு குறிப்பிட்ட ஐபிஎல் போட்டியில் பணத்தை சூதாடிவிட்டு கடனில் சிக்கியது தவித்து வந்தார். மீனு செயின் பழக்கமானதும் அவரை வைத்து பணத்துக்காக அரங்கேறிய உண்மையான நாடக காதல் அது…!

தலைநகர் டெல்லியில் இளம்பெண் ஷ்ரத்தா தனது காதலன் அப்தாப் பூனாவாலா என்பவரால் கொடூரமாக கொல்லப்பட்டு, அவரது உடல் 35 துண்டுகளாக பிரிட்ஜில் பாதுகாத்து வைத்து, பல்வேறு பகுதிகளில் வீசி சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அப்தாப் பூனாவாலா டேட்டிங் செயலி மூலமே ஷ்ரத்தாவை காதலித்து உள்ளார்.அப்தாப் வெவ்வேறு டேட்டிங் தளங்கள் மூலம் சுமார் 15 முதல் 20 பெண்களுடன் தொடர்பில் இருந்து உள்ளார். ஷ்ரத்தா கொலை வழக்கு வெட்டவெளிச்சமானதால் அவர்கள் தப்பித்து கொண்டனர்.

ஜெய்ப்பூரைச் சேர்ந்த, கட்டுமானத் துறையில் ஒரு சாதாரண இடைத்தரகராக இருந்த துஷ்யந்த் ஷர்மா (27), டேட்டிங் ஆப மூலம் பிரியா சேத் என்ற பெண்ணைச் சந்தித்தார். தான் ஒரு ரூ. 25 கோடி வருமானம் கொண்ட ஒரு நிறுவனத்தின் தலைவர் அவரிடம் கூறி உள்ளார்.

2018 ஆம் ஆண்டு, மே 2 ஆம் தேதி, பிரியா ஷர்மாவை தனது பிளாட்டில் வந்து சந்திக்கும்படி கேட்டுக் கொண்டார், அங்கு வந்த ஷர்மாவை அந்த பெண்ணும் மேலும் இரண்டு நண்பர்களும் சேர்ந்து அவருக்கு போதைப்பொருள் கொடுத்தனர். பின்னர் அவரிடம் பணம் கேட்டு மிரட்டினர். ஆனால் சர்மா அவர் பணக்காரர் அல்ல என்றும், உண்மையில் அவர் இரண்டு வயது குழந்தையுடன் இடைத்தரகர் என்றும் ஒப்புக்கொண்டார்.

விரக்தியடைந்த மூவரும், சர்மாவை பணயக் கைதியாக்கி அவரது தந்தையிடம் பணத்தை பெற்றனர். பின்னர் சர்மாவை துண்டு துண்டாக வெட்டி சர்மாவின் டெபிட் கார்டை பயன்படுத்தி வாங்கிய சூட்கேசில் அடைத்தது அந்த துண்டுகளைடெல்லி-ஜெய்ப்பூர் விரைவுச்சாலையில் கொட்டினர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.