சேலம் மாவட்டத்தில் உள்ள ஆட்டையாம்பட்டி எனும் பகுதியில் வசித்து வரும் கீர்த்தி வர்மன் (27 வயது) என்ற நபருக்கு நிஷாந்தினி (22 வயது) என்ற மனைவியும் மூன்று வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றது.
இவர் பூ வியாபாரம் செய்து தனது குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். நிஷாந்தினி தற்போது இரண்டாவது முறை கர்ப்பம் தரித்துள்ளார். இவருக்கு கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து வீரபாண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக நிஷாந்தினி சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கூறினார்கள்.
ஆம்புலன்ஸ் மூலமாக சேலம் அரசு மருத்துவமனைக்கு நிஷாந்தினி கொண்டு செல்லப்பட்ட நிலையில் பிரசவ வலியால் துடி துடித்த அவர் பரிதாபமாக உயிரிழந்து இருக்கின்றார். இதன் காரணமாக, அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் சரிவர சிகிச்சை அளிக்காததால் நிஷாந்தினி உயிரிழந்ததாக குற்றம் சாட்டினார்கள்.
இதுனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து கர்ப்பிணிப் பெண்ணின் சாவு பற்றி விசாரித்து வருகின்றனர். பிரசவ வழியில் கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.