டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு; அண்ணா பல்கலை அறிவிப்பு.!

அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளில், முதுநிலை படிப்புகளான எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக், எம்.ஆர்க் மற்றும் எம்.பிளான் படிப்புகளில் சேருவதற்கு, ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தால் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (TANCET) நடத்தப்படுகிறது.

டான்செட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே தமிழ்நாட்டிலுள்ள உயர்கல்வி நிறுவனங்களில் மேற்கண்ட படிப்புகளில் சேர முடியும். அதன்படி மாநிலத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக வளாகம், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம்‌, சுயநிதி பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகளில் TANCET மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

இந்தநிலையில் நடப்பு ஆண்டு முதல் எம்பிஏ மற்றும் எம்சிஏ படிப்புகளுக்கு டான்செட் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். அதேபோல் முதுகலை பொறியியல் (எம்இ), , முதுகலை தொழில்நுட்பம் (எம்டெக்), முதுகலை கட்டிடவியல் (எம்.ஆர்க்) மற்றும் மற்றும் முதுகலை திட்டமிடல் (எம்.பிளான்) உள்ளிட்ட பொறியியல் தொழில்நுட்ப படிப்புகளுக்கு பொது பொறியியல் நுழைவுத் தேர்வு மற்றும் மாணவர் சேர்க்கை (சிஇஇடிஏ – 2023) தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது.

அதன்படி டான்செட் மற்றும் சிஇஇடிஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் பிப்ரவரி 22ம் தேதிக்குள் (இன்று) விண்ணப்பிக்க வேண்டும் என அண்ணா பல்கலைகழகம் அறிவித்து இருந்தது. இந்தநிலையில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை அதிகரித்து அண்ணா பல்கலைகழகம் உத்தரவிட்டுள்ளது.

பஞ்சபூத மருத்துவம் என்பது என்ன… நாடி வைத்தியம் மூலம் நோய் வராமல் தடுப்பது எப்படி?

அதன்படி பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்துகளை ஏற்று, டான்செட் மற்றும் சிஇஇடிஏ ஆகிய இரு தேர்வுகளுக்கும் வருகிற 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடைசி ஆண்டு இளநிலை படித்து வரும் மாணவர்களும் விண்ணபிக்கலாம். மேலும் கவுன்சிலிங் மற்றும் மாணவர் சேர்க்கையின் போது கடைசி ஆண்டு மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ் கொண்டு வருவது கட்டாயம் என்று அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது.

அதேபோல் எம்பிஏ படிப்புகளுக்கான டான்செட் தேர்வு மார்ச் 25ஆம் தேதி மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரை நடைபெற உள்ளது. எம்சிஏ படிப்புகளுக்கான தேர்வு மார்ச் 25ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து எம்இ, எம்டெக், எம்ஆர்க் படிப்புகளுக்கு நடத்தப்பட உள்ள சிஇஇடிஏ தேர்வு அடுத்த நாள் அதாவது மார்ச் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. குறிப்பாக காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெற உள்ளது குறிப்பிடதக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.