
தனுஷ் 50வது படத்திற்கு இசைமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்?
நடிகர் தனுஷ் பவர் பாண்டிபடத்திற்கு பிறகு அடுத்ததாக இயக்கும் படம் ராயன். தனுஷின் 50 வது படமாக உருவாகிறது. தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அதை முடித்தபிறகு ராயன் படத்தை இயக்கி நடிக்கிறார். இந்த படத்திற்கு அனிரூத் இசை அமைப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் அனிருத்துக்கு பதிலாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம். ஏற்கனவே தனுஷின் மரியான், ராஞ்சனா, அட்ரங்கி ரே போன்ற படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் உடன் விஷ்ணு விஷால், எஸ்.ஜே. சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் என பலரும் இணைந்து நடிக்க உள்ளனர்.