கடந்த 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா நோய் தொற்றுக்குப் பிறகு பொதுமக்கள் தற்போது தான் சகஜமாக வெளியே வர தொடங்கியுள்ளனர். ஆனால் சமீப காலமாக பருவநிலை மாற்றங்களால் புதிய வகை வைரஸ் நோய்கள் பரவி வருகின்றன.
அதன் காரணமாக மருத்துவமனைகளில் கூட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சிறுவர்கள் முதியவர்கள் என இந்த புதிய வகை வைரஸ் காய்ச்சல் பாதித்து வருகிறது.
அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் கொரோனோவை விட மிக வேகமாக வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இந்த வைரஸ் காய்ச்சல் குறிப்பாக 15 நாட்கள் வரை தொண்டை புண்ணால் அவதிப்படுகின்றனர்.
சாதாரண சளி இருமல் காய்ச்சலால் மாத்திரை மருந்து எடுத்துக் கொண்டால் ஒரு வாரத்தில் சரியாகிவிடும். ஆனால் இந்த வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்படுவோர் தொண்டை வலியால் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் காய்ச்சல் விட்டாலும் 15 நாட்களுக்கு மேலாக தொண்டை வலியால் அவதிப்படுகின்றனர்.